7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பணி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், பாஜக கூட்டணி கட்சிகளுடன் 344 மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் சூழல்நிலவியுள்ளது.
இந்நிலையில், பாஜகவின் வெற்றிக்குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் டுவீட் செய்துள்ளார்."உலகின் மிகப்பெறிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள பொதுமக்கள் தங்களது முடிவை தெரிவித்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பிரதமராக உங்களது இரண்டாவது இன்னிங்ஸில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று சாதனைப் புரியம்" என பதிவிட்டார்.