ETV Bharat / briefs

திருச்சியில் கரோனாவால் 60 வயது முதியவர் உயிரிழப்பு - second person dead of corona at Trichy

திருச்சி : அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார்.

trichy second person dead for corona
trichy second person dead for corona
author img

By

Published : Jun 18, 2020, 4:18 PM IST

கரோனா தொற்று தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில் இதுவரை 179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 126 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவால் திருச்சியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல், உரிய பாதுகாப்புடன் பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளிவாசல் கல்லறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் திருச்சியில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய ரயில்வேயின் அறிவிப்பால் 30 பயணிகள் ரயில்களை தமிழ்நாடு இழக்கும் - சு.வெங்கடேசன் எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.