தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்ட தந்தை, மகன் விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள்.
ஏழு கோரிக்கைகள்:
1. CBI விசாரணை வேண்டாம்; CBCID விசாரணையே தொடரட்டும்.
2. மருத்துவ அலுவலர், கிளைச்சிறை அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சாட்சியமளித்த தலைமை காவலர் ரேவதி குடும்பத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
4. FOP என்னும் பெயரில் ஊடுருவிய சங்பரிவார்களைக் கைது செய்ய வேண்டும்.
5. 113ஆவது சட்ட ஆணைய அறிக்கையின்படி சாட்சியச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
6. இவ்வழக்கிற்கு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும்.
7. தந்தை, மகன் என இருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்திற்கு குறைந்தது ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்ய கட்டுப்பாட்டு அறை வேண்டும்: அன்புமணி ராமதாஸ்