ETV Bharat / briefs

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணிகளை ஆணையாளர் ஆய்வு

சேலம்: சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று (ஜூன் 10) ஆய்வு மேற்கொண்டார்.

Salem New Parking Building Inspection
Salem New Parking Building Inspection
author img

By

Published : Jun 10, 2020, 9:34 PM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகர திட்டத்தில் ரூ. 932 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 72 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல் சீர்மிகு நகர திட்ட கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண் 32-ல் விக்டோரியா வணிக வளாகம் அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், "விக்டோரியா வணிக வளாகம் அருகில் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தரைதளத்தில் 949 சதுர மீட்டர் பரப்பளவில் 24 நான்கு சக்கர வாகனம் நிறுத்தமும், முதல் தளத்தில் 949 சதுர மீட்டர் பரப்பளவில் 151 இருசக்கர வாகனம் நிறுத்தமும், இரண்டாம் தளத்தில் 949 சதுர மீட்டர் பரப்பளவில் 151 இருசக்கர வாகனம் நிறுத்தமும், மூன்றாம் தளத்தில் 949 சதுர மீட்டர் பரப்பளவில் 151 இருசக்கர வாகனம் நிறுத்தமும், நான்காம் தளத்தில் 949 சதுர மீட்டர் பரப்பளவில் 151 இரு சக்கர வாகனம் நிறுத்தமும் என மொத்தம் 4 ஆயிரத்து 745 சதுர மீட்டர் பரப்பளவில், 24 நான்கு சக்கர வாகனங்கள், 604 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 628 வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மின்தூக்கி வசதிகளுடனும் இவ்வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் சீர்மிகு நகர திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் தினம்தோறும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஹோமியோபதி மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளவும், கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.