ETV Bharat / briefs

சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளை முயற்சி - நாகர்கோவில் வடசேரி

குமரி: வடசேரி காசி விஸ்வநாதர் கோயிலில் கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் வந்ததால், கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.

robbery attempt in temple
robbery attempt in temple
author img

By

Published : Jul 18, 2020, 4:51 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வழக்கம்போல் நேற்று முன் தினம் (ஜூலை 16) மாலை பூஜைகள் முடித்து, நிர்வாகிகள் கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இரவில் திடீரென இரு கொள்ளையர்கள் கோயிலுக்குள் நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திசைமாற்றி திருப்பி வைத்து விட்டு, கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

ஊர்மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், அவர்களது கொள்ளை முயற்சி தோல்வியடைந்த நிலையில், அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இக்கோயிலில் ஏற்கெனவே மூன்று முறை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய வேண்டும் என கோயில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.