திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா கருமாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் பால் வியாபாரி சிவலிங்கம். இவரின் மனைவி வசந்தா இன்று (ஜூன் 10) காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கழுத்தில் இருந்த மூன்று சவரன் தாலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து அதே தெருவில் நிவேதா என்பவரின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த செல்போனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் (ஜூன் 8) அதே பகுதியில் இரண்டு வீடுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.