ETV Bharat / briefs

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் முதலமைச்சருக்கு கடிதம்! - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்

கோயம்புத்தூர்: மருத்துவ காப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

Retired Transport Employees Letter To CM

author img

By

Published : Aug 21, 2020, 4:30 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர் களப்பணியாளர்கள் தணிக்கையாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தில், "2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையையும் அதற்கு பின்னர் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத்தொகை இதுவரைக்கும் கிடைக்க வில்லை, மருத்துவ காப்பீட்டை முறைப்படுத்த வேண்டும், 58 மாதங்கள் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல அம்ச கோரிக்கையை முன்னிறுத்தியிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், தலைவர் நாதன், ஜெப கனி, செல்வகுமார், பிரேம் குமார் தலைமையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.