ETV Bharat / briefs

கும்மிடிப்பூண்டியில் மூதாட்டி சடலமாக மீட்பு! - Recovery of the body of an old woman in Gummidipoondi

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

60 Year Old Lady Found Dead In Lake
60 Year Old Lady Found Dead In Lake
author img

By

Published : Aug 13, 2020, 10:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் பழமை வாய்ந்த அரகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் நடுவே உள்ள குளத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதந்துள்ளது.

இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு காவல்துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த மூதாட்டி பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சித்தம்மாள் (60) என்பதும், அவர் கடந்த பத்து வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெறுவதும் தெரியவந்தது.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்டதால் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.