ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்த நிலையில், ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூரில் மூன்று பெண்களுக்கும் , வெள்ளிப்பட்டிணம், மண்டபம், போகலூர், முதுகுளத்தூரில் 13 ஆண்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று 300-ஐ கடந்துள்ளது. இதுவரை ராமநாதபுரத்தில 8 பேர் உயிரிழந்துள்ளனர். காரோனா பரவும் வேகம் அதிகமாக இருப்பதால், மதியம் 3 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என வணிக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.