திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பாச்சல் கிராமம் ஜெய்பீம் நகரில் ரயில்வே இருப்பு சாலை உள்ளது. அதன் சாலையை ஜெய்பீம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரயில்வே துறையினர் இப்பாதையில் தற்போது வரக்கூடிய ரயில்கள் 130 கி.மீ. வேகத்தில் செல்வதாகவும் அதனால் பொதுமக்கள் இந்த வழியாக கடந்து செல்வது ஆபத்தானது எனவும் கூறி சாலையின் குறுக்கே சுவர் எழுப்பினர்.
அதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுவர் எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரயில்வே துறை அலுவலர்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று வழி ஏற்படுத்தித் தருவதாக கூறிய பின் மக்கள் கலைந்து சென்றனர்.