ETV Bharat / briefs

புதிய குவாரி வேண்டாம் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

author img

By

Published : Jun 12, 2020, 5:51 PM IST

ஈரோடு: அந்தியூர் பகுதியில் புதிய குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்திட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Public petition
Public petition

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொமாராயனூர் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்திட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், “தங்கள் பகுதியில் மணல் எடுக்கவும், ஜல்லி கற்களை வெட்டியெடுக்கவும் அனுமதி வழங்கினால் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் இயங்கியபடி சாலைகள் சேதாரம் ஆவதுடன் மணல், ஜல்லி கற்களை வெட்டியெடுக்கும் சப்தம் குடியிருக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதால் புதிய நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்திட வேண்டும்.

அதேசமயம், குவாரி அமைந்தால் அதிலிருந்து வெளியேறும் புகை, தூசிகள் அங்குள்ள விவசாயப் பயிர்களையும் அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. குவாரிகளிலிருந்து வெளியேறும் புகை, மண் துகள்களால் குடியிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, புதிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து மக்களையும், விவசாய நிலத்தையும், வீடுகளையும் காப்பாற்றிட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.