கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சுகாதார துறை கூடுதல் செயலாளர் கே.எஸ்.செல்வக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், “கரோனா தொற்று தடுப்பு பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வக பணியாளர்கள், தூய்மை தொழிலாளர்கள் தங்களை தற்காத்து கொள்ளவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், நாளொன்றுக்கு 15 ஆயிரம் பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் அரசின் 21 சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மருத்துவ பணியில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் ஆறு மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, தமிழ்நாடு முழுதும் 21 அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் முழு உடல் கவசங்கள் அனுப்பப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த வார்டுகளுக்கு செல்லும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையாக கிடைப்பதில்லை என குற்றம்சாட்டை முன்வைத்தார்.
வழக்கமாக அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்லும்போது வழங்கப்படும் சாதாரண உடைகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனால்தான் மருத்துவர்கள் பாதிக்கப்படுவதும், இறப்பதும் தொடர்வதாக வேதனை தெரிவித்தார். அதேசமயம் அந்த வார்டுகளில் நாளொன்றுக்கு எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள், ஆறு மணி நேரத்திற்கு மேல் கவச உடையை பயன்படுத்த முடியாது என விதிகள் உள்ளபோது எவ்வாறு உடைகள் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதேபோல பேரிடர் மேலாண்மை சட்டப்படி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட வாரியான குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுக்களை அமைக்கவும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, முன்கள பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரரின் இரு கோரிக்கைகள் தொடர்பான விளக்கத்தை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசின் கரோனா சிகிச்சை மையங்களில் பணியில் உள்ளவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் விவரங்கள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.