பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் தலைகவசம் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விழிப்புணர்வு பலகை பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் தலை கீழாக மாற்றி பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு விழிப்புணர்வு பேனரைக் கூட சரியாக வைக்காமல், இப்படியா காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.