கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, சத்தியமங்கலம் பகுதியில் கோட்டுவீரம்பாளையம், ரங்கசமுத்திரம், வடக்குப்பேட்டை, கூம்பு பள்ளம் ஆகிய இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, தேவையின்றி வெளியில் சுற்றிவந்த பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து டிஎஸ்பி சுப்பையா கூறுகையில், “விதியை மீறி வந்த கனரக வாகனங்கள், இருசக்கரத்தில் வந்த 100 வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. ஒருமணி நேரத்தில் 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கடுமையான கட்டுப்பாடு காரணமாக வீதியில் சுற்றி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய இளைஞர் - காவல் துறையினருடன் வாக்குவாதம்