ETV Bharat / briefs

காவலர் தேர்வில் இறுதிநிலை தகுதி பெற்றவர்களை மறு பரிசீலனை செய்ய வேண்டி மனு

திருப்பூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறு பரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காவலர் தேர்வில் இறுதிநிலை தகுதி பெற்றவர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டி மனு

author img

By

Published : Jul 23, 2020, 4:50 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று 8 ஆயிரத்து 538 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இருப்பினும் தமிழ்நாட்டில் காவலருக்கான காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் காவலருக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்துவது சிரமம், எனவே 2019-2020 ஆம் ஆண்டு அனைத்து தகுதி சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தினால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.

எனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு காலி பணியிடங்களில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2019ஆம் ஆண்டு இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் அப்படி வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில் மருத்துவ பரிசோதனை மட்டும்தான் நடைபெறும் எனவும் தெரிவித்து அவர்கள் பயிற்சி பெறும் ஆறு மாத காலமும் சம்பளமும் வேண்டாம் எனவும் தற்போதைய சூழ்நிலையில் நிதி நெருக்கடியில் தவித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.