அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆளூங்கட்சியினருக்கு எதிராக அம்மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அவர்கள், "ஸ்ரீபுரந்தான், கடம்பூர், உதய நத்தம், சாத்தம்பாடி, காரைக்குறிச்சி, அம்பாப்பூர், அணைகுடம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பணிகள் ஒதுக்கப்படவில்லை.
ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்றக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் ஆளுங்கட்சியினர் தன்னிச்சையாக குடிமராமத்து பணிகளை மேற்கொள்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே ஊராட்சி செயலாளர் மூலமாக பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் முயற்சிக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டினர்.
ஆளுங்கட்சியின் மீது ஊராட்சித் தலைவர்கள் புகார் மனு அளித்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : விமானங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!