கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணை 48 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது, அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 13.20 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தின் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகளின் கேரிக்கையை ஏற்று இன்று பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பாசனத்துக்காக நீரை திறந்து விட்டனர். இதனால் 64 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.