கரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று , அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக குடிநீர் தேவை, 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆறாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று கரூர் மாவட்ட எல்லையில் அமராவதி நதியானது வந்தடைந்தது, அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் குடிநீர் மற்றும் பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு தண்ணீரை திறந்து விடப்படுகிறது.
எனவே, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம்.
கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என ஆண்டான்கோவில் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.