ETV Bharat / briefs

‘விளம்பரம் தேடிக்கொள்வது ஸ்டாலின் தான்’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - Opposition leader Stalin is seeking publicity

சென்னை: விளம்பரம் தேடிக்கொள்வது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

author img

By

Published : Jun 2, 2020, 11:08 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் அம்மா மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் இருந்தாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தான் இந்தத் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே, சென்னை மாநகர மக்கள் அரசு அறிவித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும். கரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் கடமையுணர்வோடு நம்மைக் கட்டுப்படுத்தி, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றி நடந்தால்தான் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற பொதுக் கழிப்பறைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதி, மக்கள் அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் எல்லாம் கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யப்படுகிறது. அதோடு, நம்முடைய பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றபொழுது, அவர்களை அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் எவ்விதத் தடையுமில்லாமல் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சில குற்றச்சாட்டுகளைப் பேசியிருக்கிறார். பத்திரிகைகளிலும் அது செய்தியாக வந்திருக்கிறது. நான் மாவட்ட ஆட்சியாளர்களுடன் 29.5.2020 அன்று நடத்திய காணொலிக் காட்சிக் கூட்டத்தில் பேசுகின்றபொழுது, சில புள்ளி விவரங்களை சொன்னேன். அதில், 9.1 லட்சம் PCR கிட்கள் வழங்கப்பட்டன. 4.66 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மீதி 1.7 லட்சம் அரசாங்கத்திடம் இருப்பதாக நான் குறிப்பிட்டேன். ஆனால், அதை அவர்கள் எடுத்துக் கொண்டு, இருப்பு 4.47 லட்சம் இருக்க வேண்டும், ஆனால் 2.71 லட்சம் PCR கிட்டுகள் எங்கே போயிற்று என்று கேட்கின்றார்.

எங்களைப் பொறுத்தவரைக்கும் சரியான முறையில் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறோம். அதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மீதி எங்கே போயிற்று, முதலமைச்சர் விளம்பரம் தேடுவதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பை கொடுத்திருக்கிறார் என்கிறார். ஸ்டாலின் தான் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். அரசாங்கமும் அல்ல, நானும் அல்ல" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.