டெல்லி: ஒடிசா, சிக்கிம், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்கள் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புதிதாக இணைந்துள்ளது.
உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அங்கமாகத் திகழும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் இதுவரையில் 17 மாநிலங்கள் நல்ல பயனை அடைந்து வந்தன. இச்சூழலில் நாடு முழுவதும் 2021க்குள் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில் ஒடிசா சிக்கிம் மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்கள் தங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இத்திட்டத்தில் ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவெளி மற்றும் தமன் & தியு, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் ஆகிய 17 மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.