இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக 634 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில், 183 கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது கரோனா சோதனை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக சராசரியாக 30க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நமது சுகாதாரத் துறையில் உள்ள நிறை, குறைகள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும். கரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தவறில்லை, அதே நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேசிய மருத்துவர்கள் தினத்தன்றும், கரோனா சமயத்தில் மிகவும் சங்கடங்களுக்கு இடையே பணிபுரிந்துவரும் அனைத்து மருத்துவர்களுக்கும், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கும் நன்றிகலந்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அங்கன்வாடி மையத்தில் பெண்குழந்தை மீட்பு!