ETV Bharat / briefs

சாத்தான்குளம் விவகாரத்திற்கு குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா! - பிரியங்கா சோப்ரா

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தந்தை, மகன் சந்தேகமான முறையில் உயிரிழந்த விவகாரம் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
author img

By

Published : Jun 27, 2020, 4:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வணிகர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். அவர்களை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறி அவர்களது உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தச் செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன குற்றம் செய்திருந்தாலும், எந்த ஒரு மனிதனுக்கும் இதுபோன்ற மிருகத்தனமான விஷயம் நடக்கக்கூடாது.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்த உண்மை விவரம் தெரியவேண்டும். அவர்களின் குடும்பம் தற்போது என்ன நிலையில் இருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எனது ஆறுதல் மற்றும் பிரார்த்தனைகள். நாம் அனைவரும் ஒன்றுகூடி குரல் கொடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சாத்தான்குளம் வற்றலாம், நீதிக்குளம் வற்றக்கூடாது' - விவேக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.