நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் வனப்பகுதியில் கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கு பலரும் அத்துமீறி செல்கின்றனர்.
இந்த வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அருவி அருகே செல்ஃபி எடுக்கும்போது தண்ணீரில் அடித்துச் சென்று உயிரிழந்தார். இதனால் இந்தப் பகுதியில் யாரும் நுழையக் கூடாது என வனத் துறையினரும் காவல் துறையினரும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் மூன்று இளைஞர்கள் அத்துமீறி நடை பயணம் மேற்கொண்டதுடன், வனங்களுக்குள் சென்று அனுமதியின்றி புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இதனையறிந்த குன்னூர் வனச்சரகர் சசிகுமார், தனிக் குழுவாகச் சென்று வனப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு அறிவுரை வழங்கியதுடன், காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.