டெல்லி: சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரணம் தொடர்பாக ஆறு வாரத்திற்குள் காவல்துறை பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, காவல் துறை உயர் அலுவலர்களிடம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்து ஒரு அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதில் "விசாரணை அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை, மருத்துவ சிகிச்சைப் பதிவு, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, உடல் பரிசோதனை அறிக்கை ஆகியவை அடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய அடித்ததாக தலைமை காவலர் வாக்குமூலம்
இதனை ஆறு வாரங்களுக்குள் சமர்பிக்க தமிழ்நாடு காவல் இயக்குநர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். சாத்தான்குளம் காவல் துறையினர்தான் அவர்களை அடித்துக் கொலை செய்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
திடீர் விடுப்பில் சென்ற மருத்துவர்; ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கில் எழும் சந்தேகங்கள்!
இந்த வழக்கை நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரித்து வருகிறார். கோவில்பட்டி கிளைச் சிறை, சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜின் உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
'இது எனது இந்தியாவே இல்லை' - சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஆனந்த் மஹேந்திரா
அந்த வகையில், சாத்தான்குளத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் ரேவதி என்பவரிடம் பெற்ற வாக்குமூலத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் காவலர்கள் அடித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.