ETV Bharat / briefs

நாளை விற்பனைக்கு வரும் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன்

author img

By

Published : Jun 22, 2020, 10:01 PM IST

ரியல்மி நார்சோ 10 A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Breaking News

ஓப்போவின் இணை நிறுவனமாகத் தனது பயணத்தை தொடங்கிய ரியல்மி விரைவிலேயே தனி நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. பிரபல சீன நிறுவனமான ரெட்மி நிறுவனத்திற்கு கடும் போட்டியை தந்துகொண்டிருக்கும் ரியல்மி நிறுவனம் கடந்த மாதம் நார்சோ 10, நார்சோ 10 A என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நார்சோ 10 A ரூ.8,499 விற்கப்பட்டது. இந்த மாடல் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ரியல்மி நிறுவனம் தனது புதிய நார்சோ 10 A மாடலில், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய வேரியண்டை தற்போது வெளியிட்டுள்ளது.

ரூ. 9,999 க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன், நாளை முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று ரியல்மி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\

ரியல்மி நார்சோ 10A சிறப்புகள்

  • 6.52 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர்
  • பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி
  • பாதுகாப்பிற்குக் கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.