ETV Bharat / briefs

'புதிய சித்த மருத்துவக் கல்லூரியை சென்னையைத் தவிர்த்து வேறிடத்தில் அமைக்க வேண்டும்' - Union Ayush ministry

சென்னை : தமிழ்நாட்டில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைக்கவிருக்கும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியை சென்னையைத் தவிர்த்து வேறு வட மாவட்டத்தில் அமைக்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதிய சித்த மருத்துவக் கல்லூரியை  சென்னையைத் தவிர்த்து வேறிடத்தில் அமைக்க வேண்டும் !

author img

By

Published : Jun 28, 2020, 6:42 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் புதிய இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு புதிய சித்த மருத்துவக் கல்லூரி வருவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது என்றாலும் கூட, அதை சென்னையில் அமைக்க முடிவு செய்திருப்பது யாருக்கும் பயன் அளிக்காது.

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என்பது மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு இணையான நிறுவனம் ஆகும். முதுநிலை சித்த மருத்துவப் படிப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்குத் தான் அங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், சித்த மருத்துவ நிறுவனத்தின் மனிதவள ஆதாரங்கள் அனைத்தும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியின் கற்பித்தல் பணிக்கு மட்டுமே செலவிடப்படும்.

இது தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பெரும் தடையாக அமையும். தமிழ்நாட்டில் இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும். அத்தகைய கல்லூரி சென்னைக்கு வெளியில் அமைக்கப்பட வேண்டுமே தவிர, சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்படக் கூடாது.

இளநிலை சித்த மருத்துவக் கல்லூரி தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்பட்டால், ஏற்கனவே அங்கு பணியிலிருக்கும் பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டே புதிய கல்லூரியை நடத்துவதுதான் சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டம் ஆகும். அதனால், புதிய சித்த மருத்துவக் கல்லூரியில் தரமான கல்வி கிடைக்காது என்பதுடன், ஆராய்ச்சி பணிகளும் கடுமையாக பாதிக்கப்படும்.

சென்னைக்கு வெளியே உள்ள ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், அங்கு புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்; சித்த மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

எனவே, தமிழ்நாட்டில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைக்கவிருக்கும் புதிய சித்த மருத்துவக் கல்லூரியை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் அமைக்க முன்வர எடுக்க வேண்டும். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.