ETV Bharat / briefs

"தல ரசிகர்களை இருளில் மூழ்கி அடிக்கப்போகும் யுவன்"

author img

By

Published : Jun 26, 2019, 11:42 PM IST

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் "வானில் இருள்" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ, நாளை இரவு 7.45 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் தல ரசிகர்களை இருளில் மூழ்கி அடிக்கபோகும் யுவன்!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் பிங்க். தற்போது அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இத்திரைப்படம் அதிகார்வபூர்வமாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். வித்யா பாலன் தமிழில் முதல்முறையாக நடிக்கும் இத்திரைப்படதுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும், நிரஷ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்படிப்பு முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் "வானில் இருள்" என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை இரவு 7.45 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஷா இசையில், உமா தேவி எழுதிய இந்த மெலடி பாடல், நாளை முதல் அனைவரது பிளேலிஸ்ட்களிலும் ரிபிட் மோடில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, யுவன் - உமாதேவி காம்போவில் என்.ஜி.கே திரைப்படத்தில் வெளியான "அன்பே பேரன்பே" என்ற மெலடி பாடல் நல்ல வரவேற்பை பெற்றுருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.