புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆடியோ வடிவில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சில கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ‘ஆரோக்கிய சேது' செயலியை மக்கள் பயன்பெற செய்வது அல்லது தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது, சுகாதாரமாக இருப்பது, பொதுநலம் காப்பது இவைகளில் இன்னும் சரியாக கவனம் செலுத்தவில்லை.
தமிழ்நாடு மாநிலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிராமங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறது. கிராமத்தின் பெண்களும், ஆண்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்பெற செய்வது அவசியம்.
ஆகையால் நீங்கள் கிராமத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஆணையர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அட்டவணையை பாருங்கள். சில கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஆணையர்கள் அவர்களின் கடமையை சரியாக செய்யவில்லை.
அவர்களின் வேலையை மேம்படுத்த வேண்டும். இதை உங்களுக்கு எத்தனை முறை சொல்ல வேண்டியுள்ளது. மக்களின் நலனை பொருட்டு, உங்கள் பொறுப்புகளை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்” எனக் கூறியுள்ளார்
இதையும் படிங்க:புதுச்சேரியில் புதிதாக 60 பேருக்கு கரோனா உறுதி!