ETV Bharat / briefs

'முதலமைச்சர் தவறான செய்தி எதுவும் சொல்லவில்லை': ஸ்டாலின் பேச்சுக்கு ராஜன் செல்லப்பா விளக்கம்!

author img

By

Published : Jun 16, 2020, 5:03 PM IST

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நிவாரணம் வழங்கிய ராஜன் செல்லப்பா, முதலமைச்சர் தவறான செய்தி எதுவும் சொல்லவில்லை, அவர் எந்த நிலையிலும் மாறவில்லை என மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார்.

ஸ்டாலின் குறித்து பேசிய ராஜன் செல்லப்பா
நிவாரணம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பன்ஓடை கிராமத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வீ.வீ.ராஜன்செல்லப்பா பங்கேற்று 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீ.வீ.ராஜன் செல்லப்பா கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொடுக்கின்ற ஆலோசனையின் அடிப்படையில் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கியது. தவிர, அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பொதுமக்களுக்குத் தொடர்ந்து நிவாரணம் வழங்கிக்கொண்டு வருகிறோம். ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் குறுக்கு வழியைக் கையாண்டு விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது.

நேற்றுவரை (ஜூன் 15) ஊரடங்கு வேண்டுமென்ற மு.க. ஸ்டாலின் இன்றைக்கு ஊரடங்கு மட்டும் போதுமா? என்ற கேள்வியைக் கேட்கிறார். கேள்வி கேட்பது மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஸ்டாலின் உண்மையாக வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்கேற்கத் தயாராக இல்லை. எதிர்க்கட்சி எதிரி கட்சியாக இருக்கிறதே தவிர, தமிழ்நாடு மக்களின் நல்லெண்ணம் கொண்ட கட்சியாக இல்லை.

முதலமைச்சர் சொல்கிறபோது ஊரடங்குத் தேவை இருக்காது என்று கருதினார்கள். குறிப்பாக, நான்கு மாவட்டத்தில் மட்டுமே ஊரடங்கு வேண்டியிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் மிக முக்கியமானது. வைரஸைக் கட்டுப்படுத்துவது, மக்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பது, மிக அவசியம். அந்த அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு இருக்கும் என்று சொன்னாரே தவிர, ஊரடங்கு இருக்காது என்று முழுமையாக சொல்லவில்லை.

அவர் சொல்லாத செய்தியை சொல்லாமல், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது என்ற வதந்தி ஆன செய்தியை தான் ஸ்டாலின் கூறினார். நேற்று (ஜூன் 15) மருத்துவக்குழு ஆலோசனை பெற்ற பிறகு, நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமல் படுத்தி, வைரஸ்களில் இருந்து மக்களைக் காப்பாற்றி வெற்றிபெறுவோம் என்ற கருத்தை முதலமைச்சர் வெளியிட்டார். முதலமைச்சர் சொன்ன அன்று சொன்ன செய்தி கருத்து வேறு, நேற்று ( ஜூன் 15) சொன்ன செய்தி வேறு எந்த நிலையிலும் மாறவில்லை" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.