திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கக் கூடிய கறவை மாட்டுக் கடனை வட்டி இல்லாமல் வழங்கிட வேண்டும், பால் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும், 50 சதவீதம் மானியத்துடன் மாட்டு தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்க வட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முகக்கவசங்கள் அணிந்து, தகுந்த இடைவெளி கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி’ - ஸ்டாலின் கண்டனம்