ETV Bharat / briefs

கரோனா வார்டுகளில் யோகா மற்றும் தியான வகுப்பு

author img

By

Published : Jun 5, 2020, 3:05 PM IST

மும்பை: கரோனா சிகிச்சை வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு யோகா மற்றும் தியான வகுப்பெடுக்கும் மருத்துவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கரோனா வார்டுகளில் யோகா மற்றும் தியான வாகுப்பெடுக்கும் மருத்துவர்

இதுகுறித்து கடந்த ஒரு மாதமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்குள் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகா பாடங்களை நடத்தி வரும் டாக்டர் டினா ரத்தோட் கூறுகையில், "இந்தக் கடினமான காலங்களில், நாம் ஒவ்வொருவரும் மனரீதியாக வலுவாக இருப்பது மிகவும் அவசியமாக இருப்பினும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் எதிர்த்து போராடும் உணர்வை இழந்து வருகிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களின் விதிப்படி நடக்கட்டும் என்று எளிதில் மனமுடைந்து விடுகிறார்கள். யோகாவும், தியானமும் ஒருவரின் வாழ்க்கையின் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தியானம் மன வலிமையை அளிக்கிறது. இவை இரண்டும் கரோனாவை தோற்கடிக்க தேவையான ஒன்று.

நான் நீண்ட காலமாக கரோனா நோயாளிகளுடன் பணிபுரிந்துவருகிறேன். இதனால் எனது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். ஆனால் நம் தேசத்திற்கு என்னுடைய தேவை மிகவும் அவசியமான நேரம் என்று எனக்குத் தெரியும். மேலும் கரோனாவை எதிர்த்து ஓர் போர்வீரராக பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.