மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தெருவில் உருவாகும் சிறு, சிறு சண்டைகள் நாளடைவில் மோதல்களாக உருவாகி கொலை நடக்கும் அளவிற்குச் செல்லும்நிலை உருவாகிவிடுகிறது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும்வகையில் மதுரை மாநகர் முழுவதும் ஒன்பது காவல் உதவி ஆணையர்கள் கொண்ட தனிப்படைக் குழு ஒன்றை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உருவாக்கியுள்ளார்.
இதன்மூலமாகத் தெருப் பகுதிகளில் நடக்கும் தகராறு, பக்கத்து வீடுகளில் நடக்கும் சச்சரவுகள், தெருச்சண்டைகள், முன்விரோதம் காரணமாக நடக்கும் இளைஞர்கள் மோதல்கள், போதைப்பொருள்கள் விற்பனை குறித்த தகவல்களைப் பொதுமக்கள் முன்கூட்டியே காவல் துறைக்குத் தகவல் அளித்தால் அக்குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் உதவலாம் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மேலும், தகவல்கள் அளிக்கும் நபர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியம் காக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.