ETV Bharat / briefs

காமராஜர் பல்கலைக்கழகத்தின் திடீர் முடிவால் மாணவர்கள் அவதி! - பருவத்தேர்வு

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப் பருவத்தேர்வையொட்டி பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள குளறுபடியான அறிவிப்புகளால் மாணவ மாணவியர் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

மதுரை
மதுரை
author img

By

Published : Sep 19, 2020, 4:24 AM IST

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு தொடங்கியுள்ளது.

முதுகலை மாணவர்களுக்கு வியாழக்கிழமையும் இளங்கலை மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் தேர்வுகள் தொடங்கின.

பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு வழங்கிய வழிகாட்டுதலில் மாணவ மாணவியர் வீட்டிலிருந்தே தேர்வு எழுத வேண்டும் தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல் அல்லது தாங்கள் பயிலும் கல்லூரி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் நேரில் சென்று ஒப்படைக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த வழிகாட்டுதலை கல்லூரி நிர்வாகங்கள் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தேர்வு தொடங்க உள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழக அலுவலர்கள் கல்லூரி நிர்வாகங்களை தொடர்பு கொண்டு தேர்வு முடித்த மாணவ மாணவியர் விடைத்தாள்களை கல்லூரிக்கு நேரில் கொண்டு வரக்கூடாது.

விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் முறையில் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முடியும் நாளான செப்டம்பர் 30ஆம் தேதி மாணவ மாணவியர் தாங்கள் எழுதிய அனைத்து தேர்வு விடைத்தாள்களை உறையில் வைத்து கல்லூரியில் நேரடியாகச் சென்று தரவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

பல்கலைக்கழகம் இரவில் இந்த அறிவிப்பை வெளியிடாததால் மாணவ மாணவியருக்கு இந்த தகவல் சென்று சேரவில்லை.

இதனால் வெள்ளிக்கிழமை தேர்வு முடித்த மாணவ மாணவியர் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு விடைத்தாள்களை நேரில் கொண்டுச் சென்றபோது அங்கு பல்கலைக்கழக அறிவிப்பை விடைத்தாள்களை அலுவலர்கள் பெற மறுத்து விட்டனர்.

இதன் காரணமாக, விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய முடியாத மாணவ மாணவியர் அவதி அடைந்தனர்.

மேலும் தேர்வை முடித்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாள்களை அனுப்ப வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது.

ஆனால், விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது அதனை மாற்றுவது உள்ளிட்டவற்றால் ஏராளமான மாணவ மாணவியர் தாமதமாகவே விடைத்தாள்களை அனுப்ப முடிந்தது.

ஒரே நேரத்தில் 46 ஆயிரம் மாணவ மாணவியர் ஒரே செயலியை பயன் படுத்துவதால் பலருக்கு செயலி இயங்கவில்லை.

மேலும் 25 பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்தால் அதனை வீடியோக்கு மாற்றவும் இயலவில்லை.

இதனால், கல்லூரி நிர்வாகங்கள் மாலை வரை விடைத்தாள்களை பெரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் விடைத்தாள்களை மின்னஞ்சலில் பெற்று ஜிப் முறைக்கு மாற்றுவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் கால அவகாசமின்றி புது புது உத்தரவு பிறப்பிப்பது கல்லூரி நிர்வாகங்களும் அதிருப்தி அடைந்துள்ளன.

தேர்வு பணிகளுக்காக கல்லூரிகளுக்குச் செல்லும் பல்கலைக்கழக அலுவலர்கள் தேர்வுகளை கண்காணிக்க அனைத்து மாணவ மாணவியரையும் ஜூம் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் கல்லூரி நிர்வாகங்களுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுவது தேர்வுப் பணிகளை கவனிக்க முடியாமல் திணறுவதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

அவசரகதியில் தேர்வுகளை நடத்தி மாணவ மாணவியரை குழப்பத்தில் ஆழ்த்துவதை விட கல்லூரிகளுக்கு வரவழைத்து நேரிலேயே தேர்வு நடத்தி இருக்கலாம் என்று பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.