மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சிறப்பு மருத்துவமனையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "மதுரையில் இதுவரை 1073 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று மட்டும் 97 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 423 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை ஒன்பது பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் மிகத் தீவிரமாக கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று அதிகாலை முதல் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த ஊரடங்கு நீடிக்கிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரியலூரில் 400ஐ எட்டிய கரோனா பாதிப்பு