கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளில் முறையாக தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பை முதல் நாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் பின்பற்றின. தற்போது அரசு வழிமுறையை காற்றில் பறக்கவிட்டு தகுந்த இடைவெளி ஏதும் இல்லாமல் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.
மதுபானம் வாங்க வரும் மதுபிரியர்கள். வரிசையில் நிற்காமல் முண்டியடித்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்த மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் அணிகிறார்களா, தகுந்த இடைவெளி கடைபிடிக்கிறார்களா என சோதனை செய்யும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள், டாஸ்மாக் மதுபான கடைகளிலும் சோதனை செய்து இ வேண்டும் என்பதே தன்னார்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: செவிலியர், மருத்துவரை ஆபாசமாகப் பேசியவர் கைது!