ETV Bharat / briefs

கை துண்டிக்கப்பட்டு சுடுகாட்டில் கிடந்த உடல் - கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை

கிருஷ்ணகிரி: ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் 37 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் சுடுகாட்டில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை துண்டிக்கப்பட்டு  சுடுகாட்டில் கிடந்த பிணம் - கள்ளக்காதலால் நேர்ந்த மரணம்

author img

By

Published : Jun 9, 2020, 1:42 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 3ஆம் தேதி திருவண்ணாமலை சாலையில் உள்ள சுடுகாட்டில் கை தனியாக துண்டிக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். அவரது கை பாரதியார் நகர் 4ஆவது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் முன்பு கிடந்தது.

இந்தக் கொலை குறித்து கிருஷ்ணகிரி துணை காவல் துறை சூப்பிரண்டு சரவணன் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் இந்தக் கொலையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தமிழரசன் (35) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “நான் லாரி டிரைவராக இருக்கிறேன். என் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்தபோது எனக்கும், பாரதியார் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் அவளை திருமணம் செய்துகொண்டேன்.

இந்த நிலையில் நான் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவி கருவுற்றாள். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரித்ததில் அவளுடன் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய் பழகிவந்தது தெரிந்தது. இந்தப் பழக்கத்தை கைவிடுமாறு நான் எனது மனைவியிடம் கூறினேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 3ஆம் தேதி பாலசுப்பிரமணியனை மது குடிப்பதற்காக அழைத்து சென்றேன். அங்கு போதையில் இருந்தபோது, அவரது வலது கையை துண்டித்து கொலை செய்தேன். பிறகு கையை ஒரு பையில் வைத்துக்கொண்டு நேராக பாரதியார் நகருக்கு வந்தேன். அங்கு வீட்டில் இருந்த எனது மனைவியிடம்தொடர்பு வைத்திருந்தவனின் கையை இதோ உனக்கு பரிசாக கொண்டு வந்துள்ளேன். அவனையும் தீர்த்துக்கட்டி விட்டேன். இனி நீ வேறு யாருடனும் தொடர்பு வைத்தால் இந்த கதிதான் என்று கூறிவிட்டு சென்றேன். இந்த நிலையில் காவலர்கள் என்னை கைது செய்துவிட்டனர்” என கூறினார். இதையடுத்து அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.