சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் 20 மாநிலத்தில் இருந்து 61 மாநிலங்களவை இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இவர்களில் அதிமுகவைச் சேர்ந்த சேர்ந்த கேபி முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை, சந்தித்து மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.பி. முனுசாமி வாழ்த்து பெற்றார்.