ETV Bharat / briefs

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கம்: ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை! - cotton auction

சேலம்: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று (ஆக.12) நடைபெற்ற ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை ஆனது.

Konganapuram Co-operative Sales Society Cotton Auction

author img

By

Published : Aug 13, 2020, 4:02 AM IST

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கோனேரிப்பட்டி பருத்தி விற்பனை சேவை மையத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிபட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், கோனேரிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

மொத்தம் 1,900 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு, 325 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது. BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ‌.3950 முதல் அதிகபட்ச விலையாக ரூ.4679 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.30 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

விவசாயிகள், பொதுமக்கள் என இங்கு வந்த பலரும் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைபிடித்தனர்.

அடுத்த ஏலம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என்று கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.