ETV Bharat / briefs

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள் - முறைப்படுத்திய காவல்துறையினர்! - கூட்டத்தை முறைப்படுத்திய காவல்துறை

கன்னியாகுமரி : கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் குமரி மாவட்ட அரசு நிகழ்வில், கோவிட்-19 கட்டுப்பாடுகளை பின்பற்றாத தொழிலாளர்களை காவல்துறையினர் முறைப்படுத்தினர்.

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள் - முறைப்படுத்திய காவல்துறையினர்!

author img

By

Published : Jun 20, 2020, 7:56 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும், கோவிட்-19 பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர் துறை மூலம் தொழில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (ஜூன் 20) வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, உபகரணங்களைப் பெற குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோணத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவித்தனர். எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் இருந்த கூட்டத்தை சீர்படுத்த அலுவலர்கள் முயன்றும் பலனளிக்காததால், அலுவலகத்தின் கதவுகளை மூடி வரிசையில் நிற்க அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தொழிலாளர் துறை அலுவலகத்தின் கதவுகள் திறக்கப்படாததால் சீற்றமடைந்த தொழிலாளர்கள் கதவுகளைத் திறந்துக் கொண்டு, மொத்தமாக உள்ளே ஓடினர். தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் திரண்டு நின்றனர். இதனால், அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தொழிலாளர்களை எச்சரித்து, ஒழுங்குப்படுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.