உலகம் முழுவதும் இன்று (ஜுன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் அர்த்தராத்திரி, ஆசனம் திருவசனம், உட்கட்டாசனம் உள்ளிட்ட 16 வகையான ஆசனங்கள் செய்யப்பட்டன. இதில், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தகுந்த இடைவெளியுடன் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதன்மூலம், அவர்கள் தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.