சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, மாற்றுத்திறன் கொண்ட நம் சகோதர, சகோதரிகளுக்கு சமத்துவமான வருங்காலத்தை வழங்க நாம் உழைப்போம் என மீண்டும் உறுதியேற்போம் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்கூறியுள்ளார். தனித்திறமைகளோடு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, உலகையே மாற்றிக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணிகாக்க உறுதுணையாய் இருப்போம் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;
இன்று கொண்டாடப்படும் சர்வதேச உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்று திறனாளிகள் அனைவருக்கும், திமுக தலைவர் வாழ்த்துக்கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள், சம வாய்ப்பினை பெற்று, அனைத்து முன்னேற்றங்களும் கிடைக்க வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம்!