ETV Bharat / briefs

இந்திய அணியின் தேடலுக்கு முடிவுகட்டிய கே.எல்.ராகுல் - சஞ்சய் மஞ்சேரக்கர்

நான்காவது வரிசையில் யார் பேட்டிங் செய்ய வேண்டும் என இந்திய அணி நடத்தும் தேடுதலுக்கு தற்போது இந்திய வீரர் கே.எல்.ராகுல் முடிவுக் கட்டியுள்ளார் என, இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் டுவீட் செய்துள்ளார்.

இந்திய அணியின் தேடுலக்கு முடிவுக்கட்டிய கே.எல்.ராகுல்
author img

By

Published : May 29, 2019, 11:05 PM IST

Updated : May 30, 2019, 8:33 AM IST

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக, பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி பயிற்சிப் போட்டியில், இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய அணியில் எந்த வீரரை நான்காவது வரிசையில் களமிறக்கலாம் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த கேள்விக்கு நேற்று கே.எல்.ராகுல் தனது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார். நான்காவது வரிசையில் களமிறங்கிய அவர், எந்த வித பதற்றமுமின்றி சிறப்பாக பேட்டிங் செய்தார். 99 பந்துகளில் 12 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் நான்காவது வரிசை பிரச்னைக் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் டுவீட் செய்துள்ளார்.அதில், நான்காவது வரிசையில் எந்த வீரரை விளையாட வைக்காலம் என இந்திய அணியின் தேடுதல் தற்போது முடிந்துவிட்டது. கே.எல்.ராகுல்தான் தற்போது அந்த இடத்துக்கு பொருத்தமானவர் என பதிவிட்டார்.

Sanjay Manjerekar
சஞ்சய் மஞ்சரேக்கர் டுவீட்

இதைத்தொடர்ந்து, இந்தத் தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டி ஜூன் 5ஆம் தேதி சவுத்ஹாம்டன் நகரில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.

Intro:Body:

vkl rahul dummy

Conclusion:
Last Updated : May 30, 2019, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.