ETV Bharat / briefs

இந்தியன் ஆயில் நிறுவன  ஊழியர்கள் சீருடையில்  களமிறங்கும் இந்தியா - Inidan Team Orange Jersey

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பயன்படுத்த இருக்கும் ஆரஞ்சு நிற ஜெர்சி உடை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சி
author img

By

Published : Jun 28, 2019, 8:14 PM IST

Updated : Jun 28, 2019, 11:05 PM IST

உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணிகள், நேருக்கு நேர் மோதவுள்ள போட்டியில் ஒரு நிற ஜெர்சியுடன் விளையாடக் கூடாது. ஏதேனும் ஒரு அணி மாற்று நிற ஜெர்சியிடன் களமிறங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்திருந்தது. இதனால், நீல நிற ஜெர்சியுடன் தொடரில் விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தங்களுக்கான மாற்று ஜெர்சியுடன் போட்டியில் பங்கேற்றன.

அதேசமயம், இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால், அவர்கள் ஜெர்சியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நீல நிற ஜெர்சியுடனே தொடரில் விளையாட உள்ளனர். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் இந்திய அணி மாற்று நிற ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி சிவப்பு, இலங்கை அணி மஞ்சள் என தங்களுக்கான மாற்று நிற ஜெர்சியை தேர்வு செய்திருந்த நிலையில், இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியை தேர்ந்தெடுத்தது.

இருப்பினும் இது குறித்த போலியான ஜெர்சியின் புகைப்படம் இணையதளத்தில் உலா வந்தது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பயன்படுத்த இருக்கும் ஆரஞ்சு நிற ஜெர்சியின் புகைப்படம் அதிகார்வபூர்வமாக வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, இனி இந்திய அணி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும், இதே ஆரஞ்சு நிற ஜெர்சியைதான் பயன்படுத்தும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் ஆரஞ்சு ஜெர்சியைக் கண்ட நெட்டிசன்கள், இது இந்திய அணியின் ஜெர்சியா அல்லது இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள் சீருடையா என இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 28, 2019, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.