ETV Bharat / briefs

கரோனா மருந்து வந்தால்போதும், முகக்கவசம் தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருவள்ளூர்:  கரோனாவிற்கு மருந்து வந்துவிட்டால் மக்களுக்கு முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கஷ்டங்கள் ஏற்படாது என்று தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

author img

By

Published : Jul 21, 2020, 11:29 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதி மண்டலம் இரண்டில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தூய்மை மற்றும் களப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்புக் கவச உடை மற்றும் கபசுர மருந்து உள்ளிட்டவைகளை வழங்கினார். அத்துடன் மருத்துவ முகாமில் கரோனா தொற்று, தெர்மல் பரிசோதனைகளை தொடங்கி வைத்தார்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனாவிற்கு மருந்து வந்துவிட்டால் முகக்கவசம், தகுந்த இடைவெளி கடைபிடித்தல் போன்ற சிரமங்கள் மக்களுக்கு இருக்காது. சென்னை மண்டலத்தில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று இல்லாத மண்டலமாக மணலி முதலில் மாறும் என நம்பிக்கை உள்ளது. கரோனா விவகாரத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம், கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாதுகாப்பை உறுதி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன“ என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.