ETV Bharat / briefs

கோவிட்-19க்கு தடுப்பூசி உருவாக்கிவரும் ராக்ஃபெல்லரின் தொண்டு நிறுவனம்!

நியூயார்க் : ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான ஐ.ஏ.வி.ஐ., கொடிய வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

author img

By

Published : Jun 21, 2020, 7:54 PM IST

கோவிட்-19க்கு தடுப்பூசி : உருவாக்கிவரும் ராக்ஃபெல்லரின் தொண்டு நிறுவனம்!

பெருந்தொற்று நோயான கோவிட்-19க்கு தடுப்பு மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான மெர்க் பார்மாசூட்டிகல்ஸுடன் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான ஐ.ஏ.வி.ஐ இணைந்து கோவிட்-19க்கு மருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயிக்கு (சார்ஸ்- கோவி-2) எதிரான தடுப்பூசியை உருவாக்கி, உலகளாவிய மருத்துவ சேவை வழங்கும் முயற்சியாக இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இந்த தடுப்பூசியானது, எபோலா சைர் வைரஸ் நோயிக்கு எதிரான வினையாற்றிய ஈ.ஆர்.வி.பி.ஓ (எபோலா சைர் தடுப்பூசி) தடுப்பூசியின் அடிப்படையான மறுசீரமைப்பு வெசிகுலர் ஸ்டோமாடிடிஸ் வைரஸ் (ஆர்.வி.எஸ்.வி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவிட்-19க்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதுவே மனிதர்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதல் ஆர்.வி.எஸ்.வி (rVSV) தடுப்பூசி ஆகும்.

இது குறித்து மெர்க் ஆராய்ச்சி ஆய்வகங்களின் தலைவர் டாக்டர் ரோஜர் எம். பெர்ல்முட்டர் கூறுகையில், "பெருந்தொற்று நோயான கோவிட் -19, இன்றைய நவீன அறிவியல், மருத்துவ மற்றும் உலகளாவிய சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. மெர்க் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் ஒத்துழைத்து நோய்த்தொற்று எதிர்ப்பு மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க உதவுகிறது.

சார்ஸ்-கோவி-2 (SARS-CoV-2) தொற்றுநோயால் ஏற்படுகிற கோவிட்-19 தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்த ஆர்.வி.எஸ்.வி எனும் தடுப்பூசியை உருவாக்கி அதன் விரைவான பலனை வெளிக்கொண்டுவர மெர்க் மற்றும் ஐ.ஏ.வி.ஐ ஆர்வமாக பணியாற்றி வருகிறது. சர்வதேச சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தால், தடுப்பூசியை உலகளவில் மக்களின் துயரத்தைப் போக்க அவர்களை சென்றடைய செய்வோம். நிறைவான திறனோடும், மலிவு விலையிலும் இந்த தடுப்பூசியை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம்" என தெரிவித்தார்.

ஐ.ஏ.வி.ஐ மருத்துவத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அலுவலருமான டாக்டர் மார்க் ஃபைன்பெர்க் கூறுகையில், "ஆர்.வி.எஸ்.வி-அடிப்படையிலான எங்களது தடுப்பூசியின் செயல் உத்தியானது, கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் உலக நாடுகளுக்கு ஒரு நம்பிக்கையை வழங்கும். அணுகுமுறையில் பெரும் பலனைக் கொடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும், எங்கள் தடுப்பூசியின் திறனை மதிப்பிடுவதற்கு மெர்க்குடன் சேர்ந்து ஒரு விரைவான ஆராய்ச்சியை செய்ய உள்ளோம்.

இந்த கடினமான உலகளாவிய சுகாதார சவாலை எதிர்கொள்ள முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வழிகளில் எங்கள் கூட்டு திறன்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடமையாற்றுவோம்" என்றார்.

லாசா காய்ச்சல், மார்பர்க் மற்றும் எபோலா சூடான் நோய் போன்ற வளர்ந்து வரும் தொற்று நோய்களுக்கு மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஐ.ஏ.வி.ஐயின் உள்பிரிவான வளர்ந்து வரும் தொற்று நோய்கள் தடுப்பு அறிவியல் களம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த மருத்துவ ஆராய்ச்சிப் பணியில் தலைவர் டாக்டர் சுவாதி குப்தா தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.