புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுவரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலர் அஸ்வின் குமார், சுகாதாரத் துறைச் செயலர் பிரசாந்த் குமார் பாண்டே, ஹோமியோபதி மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், ஹோமியோபதி முறையில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஹோமியோபதி மருத்துவர் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறு ஹோமியோபதி மாத்திரைகள் செயல்படும் என்பது குறித்தும் விளக்கினார். மேலும் இதனை மக்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.