விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் மலைக்குள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற இளைஞர் டிராக்டர் மூலம் மணல் அள்ளியதோடு வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளைத் துன்புறுத்தியதைக் கண்டறிந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.