தென் கொரியாவின் சியோலில் உள்ள பல பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆற்றங்கரையின் தடுப்புகளும் சேதமடைந்தன.
இந்த வெள்ளப்பெருக்கில் ஆறு பேர் உயிரிழந்தனர். ஏழ பேர் மாயமாகியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில், 360 பேர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.