இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், 24.03.2020 அன்று நடைபெற்ற வேதியியல், கணக்கியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான 12ஆம் வகுப்பு தேர்வுகளில் கலந்து கொள்ளாதவர்களுக்கான மறு தேர்வு 27.07.2020 அன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். தனித்தேர்வர்கள் மறு தேர்வை அந்தந்த தனியார் தேர்வு மையங்களில் எழுதுவார்கள். மறு தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து புதிய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வார்கள்.
தனியார் தேர்வர்கள் முந்தைய தேர்வுகளை எழுதிய அந்தந்த தனியார் தேர்வு மையங்களிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளை நேரடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தேர்வு பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு பகுதிகளில் தேர்வு மையங்கள் இருந்தால், வேறு மையங்கள் அமைக்க வேண்டும்". இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.