ETV Bharat / briefs

தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சரின் தொடர்பு விரைவில் வெளியாகும்!

author img

By

Published : Oct 27, 2020, 7:43 PM IST

Updated : Oct 27, 2020, 7:49 PM IST

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் அலுவலகத்தின் பங்கு தொடர்பாக தற்போதுவரை வெளியான தகவல்கள் அனைத்தும் ஒரு சிறு பகுதிதான் எனக் கேரள காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு : முதலமைச்சரின் தொடர்பு விரைவில் வெளியாகும்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் கேரளாவிற்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் கேரள முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கருக்கும் தொடர்பிருப்பதை அமலாக்க இயக்குநரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கருக்கும் அவரது ஆடிட்டர் பி. வேணுகோபாலுக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல்களைத் தொகுத்து குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசி எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, "நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய காலத்திலிருந்தே கேரள முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் இந்தக் கடத்தலுக்கும் தொடர்பில்லை எனக் கேரள அரசு கூறிவருகிறது. ஆனால், உண்மை அதற்கு மாறாக உள்ளது.

அவரது நெருங்கிய உதவியாளரும் ஐஏஎஸ் அலுவலருமான எம். சிவசங்கருக்கு இந்தக் கடத்தலில் பங்கு இருப்பது தெளிவாக உள்ளது.

இனியும், முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனக் கைகளைக் கழுவ முடியாது. முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு எல்லாம் தெரியும் என்ற உண்மை விரைவில் வெளியாகும்.

மத்திய புலனாய்வு முகமை போன்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வழக்கின் விசாரணைகள் சரியான திசையில் செல்வதாக முதலில் கூறிய கேரள முதலமைச்சர் இப்போது தன்னுடைய கருத்தை மாற்றுகிறார்.

மத்திய அரசின் விசாரணை முகமை குறித்து ராகுல் காந்தியின் அறிக்கையை தற்போது மேற்கோள்காட்டுகிறார்.

கேரள முதலமைச்சர் விஜயனும், சிபிஐ(எம்) கட்சியும் ஏன் இப்போது குழப்பமடைகிறார்கள்?

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்து பதிலளிக்காமல் விஜயன் அமைதி காக்க முயல்கிறார். இனி முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க அவருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

பாஜகவை எதிர்த்தோ, மத்திய அரசை எதிர்த்தோ இதுவரை ஒரு வார்த்தைகூட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏன் பேசுவதில்லை என்ற கேள்வி கேரள மக்கள் கேட்கிறார்கள்.

காங்கிரசும், பாஜகவும் இணைந்து சிபிஐ(எம்) அரசை வீழ்த்த துடிப்பதாக அவர் கூறுகிறார். 1977ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கேரள மண்ணில் பாஜகவின் தாய் அமைப்புகளுடனும், பாஜகவுடனும் யார் நெருங்கிய தொடர்பில் இருப்பது என மக்களுக்கு நன்கு தெரியும்.

அதை மூடிமறைக்க, இங்குள்ள காங்கிரஸ் பாஜகவுடன் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

Last Updated : Oct 27, 2020, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.